கற்பக விருஷுகம் திட்டத்தில் 11மாதங்கள் ரூ. 500/- முதல் 50000 வரை உங்கள் விருப்பத்திற்கேற்ப பணத்தை செலுத்தி தங்கத்தை சேமிக்கலாம். நீங்கள் பணம் செலுத்தும் போது தங்கத்தின் மார்க்கெட் விலை என்னவோ அதற்கு நிகரான மதிப்புள்ள தங்கம் உங்கள் கணக்கில் (பாஸ் புத்தகத்தில்) வரவு வைத்து தரப்படும். திட்டம் முடியும் போது தங்கமாக அல்லது நகைகளாக பெற்றுக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் மாதாந்திர தவணைத் தொகை பிரதி மாதம் 10-ம் தேதிக்குள் தவறாமல் செலுத்த வேண்டும்.
11 மாதங்கள் முடிந்தபின் 12வது மாதம் தங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள நேதியில் 11 மாத முழுத்தொகை அதற்கு நிகராக தங்க, வெள்ளி, வைர நகைகள் அல்லது வெள்ளி பொருட்களாக மட்டுமே பெற்றுக்கொள்ளலாம். பணமாக பெற இயலாது.
தொடர்ந்து தவணைத் தொகை தொகை செலுத்த இயலாதவர்களுக்கு தாங்கள் கட்டிய தொகையில் பரிசு பொருட்களின் தொகையை கழித்து மீதி தொகைக்கு நகைகள் பெற்றுக்கொள்ளலாம். மேலும் போனஸ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படமாட்டாது.
தவணைத் தொகை எக்காரணத்தை முன்னிட்டும் ரொக்கமாக திருப்பித் தரப்படமாட்டாது.
மாதம் ஒரு தவணை மட்டுமே செலுத்த முடியும்.
தவணைத் தொகை நிலுவையிலிருப்பின் அதிகபட்சம் இரு பாத தவணைகள் மட்டும் ஒரு மாதத்தில் ஒரே முறை மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.
பாஸ்புக் தொலைந்தால் ரூ. 30/- செலுத்தி நகல் பாஸ்புக் பெற்றுக் கொள்ளலாம்.
முகவரி மாறினால் நிர்வாகத்திடம் உடனே தெரிவித்து பாஸ்புக்கில் மாற்றிக் கொள்ளவேண்டும்.
பணம் சரியாக கட்டாதவர்கள், கட்டிய தொகையில் சிறப்பு பரிசு + 10% கழித்து மீதத் தொகைக்கு தங்க நகைகள் திட்ட இறுதியில் மட்டுமே வழங்கப்படும்.
நகைகள் வாங்கும் போது பாஸ் புத்தகம் கண்டிப்பாக கொண்டு வா வேண்டும்.
சட்ட திட்டங்களை கூட்டவோ, குறைக்கவோ அல்லது மாற்றவோ நிர்வாகத்திற்கு சகல உரிமைகளும் உண்டு.
இத்திட்ட சம்பந்தமான எல்லா விஷயங்களிலும் நிர்வாகத்தினர் தீர்ப்பே இறுதியானது.
சட்ட விதிமுறைகள் சத்தி நகர எல்லைக்கு உட்பட்டது.
மேற்கண்ட விதிமுறைகளுக்கு உட்படுகிறேன்.
MONTH | AMOUNT | TOTAL AMOUNT | BONUS | AMOUNT |
---|---|---|---|---|
11 | 500 | 5,500 | 500 | 6,000 |
11 | 1,000 | 11,000 | 1,000 | 12,000 |
11 | 2,000 | 22,000 | 2,000 | 24,000 |
11 | 3,000 | 33,000 | 3,000 | 36,000 |
11 | 4,000 | 44,000 | 4,000 | 48,000 |
11 | 5,000 | 55,000 | 5,000 | 60,000 |